700 ஆண்டுகளில் முதன் முறையாக போப் ஆண்டவருக்கு பழமைவாதிகள் எதிர்ப்பு

275 0
 ரோமன் கத்தோலிக்க கிருஸ்தவ மதத்தின் பழமை வாய்ந்த பிரிவை சேர்ந்த இறைமையியல் வல்லுனர்கள், மதகுருமார்கள் மற்றும் கல்வியாளர்கள் 62 பேர் வாடிகன் சிட்டியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) போப் ஆண்டவர் பிரான்சிஸிடம் 25 பக்க புகார் கடிதம் கொடுத்தனர்.

அதில் அவர் குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிருஸ்தவ மதத்துக்கு எதிரான கொள்கைகளை பரப்பி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளனர். அவர் மதத்துக்கு எதிரான 7 விதமான கொள்கைகளை பரப்பி வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது. திருமணம், விவாகரத்து, மறுமணம் மற்றும் கிருஸ்தவ ஆலயத்தில் நடைபெறும் சடங்குகளுக்கு எதிரான கருத்துக்களை கடந்த ஆண்டு (2016) வெளியிட்டுள்ளனர். அன்பின் மகிழ்ச்சி (தி ஜாய்ஸ் ஆப் லவ்) என்ற தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பழமைவாத கொள்கைகள் கொண்ட 4 கர்தினால்கள் போப் ஆண்டவருக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு இதுவரை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதில் எதுவும் கூறவில்லை.

கடந்த 700 ஆண்டுகளில் போப் ஆண்டவருக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. தற்போது இதுபோன்ற புகார் கூறியிருப்பது கத்தோலிக்க கிருஸ்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a comment