அமெரிக்கா தங்களுக்கு எதிராக யுத்தத்தை அறிவித்திருப்பதாகவே தாங்கள் கருதுவதாக வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் குண்டுதாரி விமானங்களை சுட்டுவீழ்த்த தங்களுக்கு உரிமை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்காவின் விமானங்கள் வடகொரியாவின் வான்பரப்பில் பறக்காவிட்டாலும், அவற்றை சுட்டுவீழ்த்த முடியும் என்று, வடகொரிய வெளிவிவகார அமைச்சர் ரி யோங் ஹோ தெரிவித்துள்ளார்.
எனினும் வடகொரியாவின் இந்த அறிவிப்பை வெள்ளைமாளிகை நிராகரித்துள்ளது.
இவ்வாறான ஆத்திரமூட்டும்பிரசாரங்களை நிறுத்துமாறும் வெள்ளை மாளிகை வடகொரியாவை கோரியுள்ளது.