அத்தியாவசியமற்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்து உணவு பெருட்களினதும் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய பொருளாதார பேரவையின் ஊடாக இதன்பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் பண்பாட்டினையும் தனித்துவத்தையும் பாதுகாத்து எமக்கு தேவையான உணவு பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
அத்துடன் உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்திக்கு சிறந்த விலையை பெற்றுக்கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டுமாயின் உள்நாட்டு பொருட்களுக்கு கூடுதல் பெறுமதி வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.