சர்வதேச கடற்றுறை சார் மாநாடான காலி பேச்சுவார்த்தை – 2017, அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஒக்டோபர் மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் நடைபெறும் இந்த மாநாடு இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடற்றுறை சார் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், 38 நாடுகளும், 11 சர்வதேச அமைப்புகளும் பங்கேற்கவுள்ளன.
இந்த மாநாட்டின் ஊடாக சர்வதேச கடற்பாதுகாப்பு குறித்த பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்த வழிஏற்பட்டிருப்பதாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.