மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது என்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டீ.சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 25ம் திகதி மாகாண தேர்தல் திருத்தச் சட்டமூலம் 3ல்2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பிட்ட சில சட்டமூலங்களை நிறைவேற்றும் போது கடைபிடிக்க வேண்டிய சில சட்டவரையறைகள் இதன்போது பின்பற்றப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் ஊடாக சட்டத்துக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.