போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய ஒரு சீரான திட்டம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி திருநகர் வடக்குப் பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்புடன் நிர்மானிக்கப்பட்ட அப்பள உற்பத்தி நிறுவனத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
நிறுவன முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, லண்டன் சைவத்திருக்கோயில் ஒன்றியத்தைச் சேர்ந்த மு.கோபாலகிருஸ்ணன், கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது போரினால் பாதிக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.