இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் என்பன இணைந்து செவிப்புலனற்றோர் தினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்தியுள்ளன.
சர்வதேச செவிப்புலனற்றோர் தினத்ததை முன்னிட்டு வடக்கு மற்றும் தெற்கு செவிப்புலனற்றோர் சங்கத்தினரால் இன்று காலை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடாத்தப்பட்டது.
பதாகைகளை தாங்கிய ஊர்வலமானது நல்லூரில் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நிறைவுபெற்றது. அதனை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன.
பதாகைகளில் சைகை மொழியை கல்வியில் உள்ளடக்கவேண்டும் என்று மும் மொழியிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
செவிப்புலனற்றோர் தின நிகழ்வில் கௌரவ விருந்தினராக சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திஸ்ஸநாயக்க, மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் கூரே ஆகியோர் கலாந்து கொண்டனர்.