வட மாகாண முதலமைச்சர் செயலகம் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மாறிவரும் சுற்றுலாத்துறை அபிவிருத்தியினை தூரநோக்கு சிந்தனை வட மாகாணத்தில் ஏற்படுத்துவோம் என்னும் கருப்பொருளிலான சுற்றுலாத்துறை தினநிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
யாழ்ப்பாண புகையிரத வீதியில் இருந்து ஆரம்பமாகிய பேரணி யாழ்ப்பாண பொது நூலகம் வரை சென்று நிறைவடைந்தது.இன்றைய சுற்றுலாத்துறை தினத்தினை முன்னிட்டு இந்த நிகழ்வு ஊர்வலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை ஆரம்பித்து வைப்பதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் வட மாகாண முதலமைச்சரின் செயலாளர் ரூபினி வரலிங்கம் ஆகியோர்களின் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தனர்.
தமிழ் பண்பாட்டினை பிரதிப் பலிக்ககூடிய வகையிலான மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் சுற்றுலாத்துறை மாணவர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்னும் கருப்பொருளிலான துண்டுப்பிரசுரங்கள் கொண்ட வாக்கிய பதாதைகள் ஏந்திச் செல்லப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டல் உரிமையாளர்களின் சுற்றுலாத்துறை தொடர்பான விளக்கங்கள் கொண்டுள்ள வாகனப் பேரணிகள் மற்றும் கடல்வள சம்பந்தமான சுற்றுலாத் துறைகள் மற்றும் இதர மேம்பாடுகள் தொடர்பாகவும் இந்த ஊர்வலங்கள் திகழ்ந்தன.
யாழ் புகையிரத வீதி இருந்து ஆரம்பிக்கப்பட்டு அங்கு இருந்து யாழ் ஆஸ்பத்திரிவீதியுடாக சென்று மத்திய பேரூந்து நிலையத்தின் ஊடாக அங்கு இருந்து யாழ் பொது நூலகம் வரை சென்றடைந்து நிறைவடைந்து. இதில் வடமாகாண அமைச்சிக்களின் செயலாளர்கள்,பணிப்பாளர்கள்,துறைசார்ந்த அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,பலரும் கலந்து கொண்டனர்.