இந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது அவதூறு பேசும் நாட்டின் ஆட்சியாளர்களான அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடி கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினரான எலப்பிரிய நந்தராஜ் தலைமையிலான மலைநாட்டு முற்போக்கு மக்கள் அமைப்பினர் கினிகத்தேனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் 100 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு அனுப்பி வைக்ககூடிய தபால் அட்டைகளும் மக்களிடம் கையொப்பம் இட்டு பெறப்பட்டது.
பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரித்த மரியாதையை வழங்காத பட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள் அந்தந்த பகுதியில் பிக்குகளிடம் ஆசீர்வாதங்களை பெற்று அவரவர் பதவியில் அமர்கின்றனர்.
இவ்வாறு ஆசிகளை பெற்று பதிவியில் அமரும் அமைச்சர்கள் பிக்குகளுக்கு எதிராக அவதூறு வார்த்தை பிரயோகங்களை பிரயோகிக்கின்றனர்.
இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கையும் தபால் அட்டை கையொப்பம் பெறலும் இடம்பெறுவதாக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.