புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கை என, அரசியலமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொய்யான பிரச்சாரங்களை கூறிய புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைகளை சிலர் குழப்ப முற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே லால் விஜேநாயக்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.