அமெரிக்காவினுள் அனுமதிக்க மறுப்பு

519 0

அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சில வெளிநாட்டவர்களை அமெரிக்காவினுள் அனுமதிக்க மறுக்கும் திட்டத்தில் மேலும் சில நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதற்கு அமைய வட கொரியா, வெனிசுவேலா மற்றும் சாட் (ஊhயன) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.

வடகொரியா, அமெரிக்காவுடன் எந்தவிடயத்திலும் ஒத்துழைப்பு தர மறுக்கும் நிலையில், அந்த நாட்டை சேர்ந்த எவரும் அமெரிக்காவினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பரிமாறப்பட்ட புலனாய்வுத் தகவல்களுக்கு அமையவே இந்த மூன்று நாடுகளும் தற்போது தடைசெய்யப்பட்ட நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த பிரகடனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு முதல் தர முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தீங்கை விளைவிக்க முயல்பவர்களுக்கு அமெரிக்காவில் இடம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

முன்னர் ஈரான், லிபியா, சிரியா, யேமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கு பயண தடை விதிக்கப்பட்டன.

 

Leave a comment