இந்த வருடத்தின் முதல் 7 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் ஆயிரத்து 700 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியினுள் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக பாதசாரிகள் 533 பேர் பலியாகினர்.
அதேபோல, இந்த காலப்பகுதியினில் 580 இற்கும் மேற்பட்ட உந்துருளி ஓட்டுனர்கள் மரணித்துள்ளதுடன், ஓட்டுனருடன் பயணித்த 106 பேரும் மரணமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, ஏனைய வாகனங்களில் பயணித்த 250 பயணிகள் மற்றும் 142 வாகன சாரதிகளும் பலியாகியுள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.