யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

308 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்விற்கு இரண்டு வார காலத்திற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கறிஞர் ஒருவரூடாக மேல்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த வேண்டுகோளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யன்துடுவ குறித்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இதேவேளைக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்திற்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்டிருந்த வேண்டுகோள் தொடர்பில், காரணிகளை முன்வைக்குமாறு சட்டமா அதிபருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment