சுமார் ஒரு கிலோ கிராம் பாரமுள்ள தங்கத்தை தனது வயிற்றுப்பகுதியில் மறைத்து கடத்த முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த பொருட்களை இந்தியாவிற்கு கடத்த முயற்சித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட சந்தேக நபர் 45 வயதுடைய பொரளை பகுதியை சேர்ந்தவர் எனவும் இந்தியாவின் கோயம்புத்தூர் நோக்கி பயணிக்கவிருந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL 193 என்ற விமானத்தில் செல்வதற்கு அவர் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரின் வயிற்றுப்பகுதியில் 4 பிஸ்கட்டுக்கள், 3 தங்கத்தகடுகள், 6 தங்க ஆபரணங்கள், மற்றும் வெள்ளி பூசப்பட்ட தங்க தகடுகள் 2 ஆகியன மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்கள் 904.77 கிராம் பாரமுள்ளதாகவும் அதன் பெறுமதி 45,23,850 ரூபா எனவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.