பிரிவினைகளின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
அனுராதபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அதனைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.