2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அரசின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை இலங்கை அரசாங்கத்தால் சாதகமான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்ட யோசனைக்கு மேலதிகமாக இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை கண்காணிப்பகத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, “ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட 30 பேர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும்” முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கூற்றின் பிரகாரம் இலங்கைக்கு சர்வதேச நீதிமன்றின் நடவடிக்கை ஒன்று அவசியம் என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்வதாக அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
சர்வதேச நீதிமன்றின் நடவடிக்கையுடனும் ஐ.நா.வின் பங்களிப்புடனும் இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.