முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் அவரது செயலாளர் பாலமானகே தயாவான்க்ஷ ஆகியோருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது தனிப்பட்ட செயலாளருக்கு சிவில் விமான சேவை அதிகாரசபையில் வேலை பெற்றுக்கொடுத்தமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தின் முதலாவது பிரதிவாதிக்கு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.