முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவில், முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட குழுவினரால் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சில விடயங்களை மறைக்க முற்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது