புதிய அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ளது, ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பிரிவு தொடர்பான யோசனையே என, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிரணியினர் குற்றம்சாட்டுவது போல, நாடு இரண்டாக பிளவுபடப் போவதும் இல்லை, பௌத்த மதத்திற்கு உரிய இடம் வழங்கப்படாது விடப்படப் போவதுமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.
தெல்கொட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ருவன் விஜேவர்த்தன மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.