கொழும்பு நகரில் தற்போதுள்ள சிசிடிவி கெமரா கட்டமைப்புக்கு, சிறந்த தொழிநுட்பத்துடன் கூடிய கெமராக்களை பொறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாரதிகள், வாகனங்களில் பயணிப்பவர்கள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை கண்காணிப்பதே இதன் நோக்கம் எனத் தெரியவந்துள்ளது.
வாகன விபத்துக்களை குறைப்பது தொடர்பிலான வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த உயர் தொழிநுட்பத்துடன் கூடிய சிசிடிவி கெமரா கட்டமைப்பு பொறுத்தப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.