பெருந்தோட்டத் துறையில் நடைமுறையில் உள்ள சுகாதார முறைமை தனியார் வசமானது.
பெருந்தோட்ட கம்பனிகளினால் பராமரிக்கப்படும் வைத்திய நிலையங்களே பெருந்தோட்ட சமூகத்திற்கு சேவையாற்றுகின்றன.
இந்த வைத்திய நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை மாத்திரமே சுகாதார அமைச்சு வழங்கி வருகின்றது.
ஏனைய அனைத்து விடயங்களும் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பிலேயே உள்ளது.
தோட்ட மருத்துவ அதிகாரிகளுக்கான சம்பளமும் தோட்டக் கம்பனிகளினாலேயே வழங்கப்படுகின்றன.
பெருந்தோட்டப் பகுதி சுகாதாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எந்தவித பொறுப்புக்களும் இல்லை.
எனவே, அரசாங்கம் கொள்கைத் தீர்மானம் ஒன்றை எடுத்து பெருந்தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயமாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
இதனால், தற்போது பணியில் உள்ள தோட்ட வைத்திய உத்தியோத்தர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட தோட்ட வைத்திய அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்குமான சந்திப்பு ஒன்று நேற்று (24) டிக்கோயா பெருந்தோட்ட மனிதவள நிதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.