ரவி எம்.பி. ரணிலுக்கு எதிராக செயற்பட்டவர்- ஜோசப் மைக்கல்

332 0

ரவி கருணாநாயக்க எம்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டவர் எனவும் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜா-எல தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.யின் கம்ஹா இளைஞர் முன்னணியின் கூட்டம் ஒன்று தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றத்தை ஒப்புக் கொண்டவர். அவரை அமைச்சுப் பதவியிலிருந்து மட்டும் நீக்கிப் போதாது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும். இது தொடர்பில் கட்சித் தலைவருக்கு நான் கூறவில்லை. ஏனெனில், ஊடகங்களில் அவர் இதனைப் பற்றி அறிந்திருப்பார் எனவும் ஜோசப் மைக்கல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment