வடக்கு மாகாணத்தில் ஐந்து சுகாதாரத்துறைக்கான ஐந்து கட்டடங்களை மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்(காணொளி)

1288 0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குரிய புனரமைக்கப்பட்ட வெளிநோயாளர்த் தொகுதி கட்டடம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதி கட்டிடம் மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகிய மூன்று கட்டிடங்களும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு மலேரியா, எயிட்ஸ், காசநோய் ஆகியவற்றிற்கு எதிரான உலக நிதியம் வழங்கிய நிதியில் இராணுவத்தின் மனித வலுவை பயன்படுத்தி அமைக்கப்பட்ட மூன்று கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் சுகாதார வைத்திய அதிகாரி விடுதி, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியனவும் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மலேரியா, எயிட்ஸ், காசநோய் ஆகியவற்றிற்கு எதிரான வழங்கிய உலக நிதியத்தின் நாட்டில் 68 கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் வடக்கிலுள்ள 13 கட்டிடங்களை இராணுவத்தின் பொறியியல் பிரிவின் மனித வலு மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஐந்து கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சுகாதார கட்டிடங்களின் திறப்பு விழா நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசர் காசிம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு மமாகாண சுகாதாரஅமைச்சர் ஞானசீலன் குணசீலன், யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி தர்சன ஹெட்டியாராய்ச்சி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி இராணுவ அதிகாரிகள், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள். பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர், கட்டட திணைக்கள அதிகாரிகள், சுகாதார சேவை வைத்திய அதிகாரிகள் பணிப்பளர்கள், மலேரியா, எயிட்ஸ், காசநோய் ஆகியவற்றிற்கு எதிரான உலக நிதியத்தின் பணிப்பாளர் பிளாங்கோ ஜில் அன்ரூந்நோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a comment