இந்நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்காலத் தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத, மதவாதத்தினை விரும்பாத, எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நாவற்குடா புனித மரியாள் அங்கிலிக்கன் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, சுற்றுமதில் மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் திறப்புவிழா நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலில் பெண்களுக்கு அதிகளவான பிரதிநிதித்துவம் வழங்கப்படவுள்ளதை மிகவும் வரவேற்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.