ஜெர்மனியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
ஜேர்மனியின் பொதுத் தேர்தல் நேற்று இடம்பெற்றது.
பிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 32.9 சதவீத வாக்குகளை பெற்று தமது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு கட்சியான சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீத வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளது.
ஜெர்மனி நாடாளுமன்றத்தில் மொத்தம் 598 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 தொகுதிகளில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்தது.
ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை ஜேர்மனியின் சான்சலராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் அஞ்சலா மெர்க்கல் சார்பான கட்சிகள் வெற்றிபெற்றுள்ள நிலையில், தொடர்ந்தும் நான்காவது தடவையாக அவர் ஜேர்மனியின் சான்சலராக பதவியேற்பாரென தெரிவிக்கப்படுகின்றது.