புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாடு ஒருபோதும் பிரிவடையாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாது.
இந்த நிலையில் நல்லாட்சிக்கு உதவி புரிய மத தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார்.