தோட்ட தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

22043 0
எதிர்வரும் காலங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, தோட்டபகுதிகளை அண்டிய பகுதிகளில் உள்ள காணிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இனங்கள் என்ற வகையிலும் மதம் என்ற வகையிலும் பிரிந்திருப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்த முடியாது.
சிங்கள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் அதேவேளை, ஏனைய அனைவரினதும் உரிமைகளை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்  அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment