கீதா குமாரசிங்கவின் மனு இன்று விசாரணைக்கு 

15934 20
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை சட்டரீதியானதல்லவென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கீதா குமாரசிங்க உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பின் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட நீதியரசர் குலாத்தினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கீதாக குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமையுடையவர் என கூறி மேன்முறையீட்டு பொதுமக்கள் சிலரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த முறைப்பாட்டை ஏற்று கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்யுமாறு உத்தரவிட்டது.
இதனை அடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கீதா குமாரசிங்க தாக்கல் செய்யத மேன்முறையீட்டு மனுவின் பிரகாரம் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்படுவது தொடர்பான தீர்ப்பு உயர்நீதிமன்றத்தினால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment