அமெரிக்க படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் லிபியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மட்டுமல்லாது அரபு நாடுகள் பலவற்றிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் காலூன்றி இருக்கிறார்கள். அதில் லிபியா நாடும் ஒன்று.
லிபியாவில் 2011-ம் ஆண்டு அதிபராக இருந்த மும்மர் கடாபியின் சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தின் மூலம் அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவரும் கொல்லப்பட்டார்.
அதன்பின்னர் ஏற்பட்ட அரசில் குழப்பம் ஏற்பட்டது. ஐ.எஸ். அமைப்பினர் தங்களின் குழுக்களை ஆங்காங்கே அமைத்தனர். அவர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், லிபியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க படை வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதில் அந்த முகாமில் இருந்த 17 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.