அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கவனியாது விட்டால், நாடும், பௌத்த சாசனமும் அழிந்து விடும் என தாயகத்தைக் காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருத்தொட்டுவாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அரசாங்கம் தனக்குத் தேவையானதைச் செய்து வருவதாகவும் தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கம் சொல்வது ஒன்று எனவும் செய்வது வேறொன்று எனவும் தேரர் சுட்டிக்காட்டியள்ளார்.
நாரஹேன்பிட்டியவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.