2018 வரவு – செலவுத்திட்டத்தில் எந்த சலுகையும் இல்லை-பந்­துல

3660 0

2018 ஆம் ஆண்­டுக்­காக எதிர்­வரும் நவம்பர் மாதம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு – செல­வுத்­திட்­டத் தில் மக்­க­ளுக்­கான எவ்­வித சலு­கை­க­ளையும் எதிர்­பார்க்க முடி­யாது.

ஏனெனில், சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் அர­சாங்கம் செய்­து­கொண்­டுள்ள உடன்­ப­டிக்­கையின் பிர­கா­ரமே வரவு – செல­வுத்­திட்டம் தயா­ரிக்க வேண்­டி­யுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.

2018 ஆம் ஆண்­டுக்­காக அர­சாங்கம் சமர்ப்­பிக்­க­வுள்ள வரவு செல­வுத்­திட்­டத்தில் மக்­க­ளுக்­கான சலு­கை­களை எதிர்­பார்க்க முடி­யுமா என வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர வரவு செல­வுத்­திட்­டத்தின் மூலம் மக்­க­ளுக்கு சலுகை வழங்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­தாலும் அவரால் அதனைச் செய்ய முடி­யாது. ஏனெனில், சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் இலங்கை கடன் பெற்­றுள்­ளது. அதற்­காக நாணய நிதி­யத்­துடன் உடன்­ப­டிக்கை ஒன்று செய்­யப்­பட்­டுள்து.

அவ்­வு­டன்­ப­டிக்­கையின் பிர­காரம் ஐந்து பிர­தான நிபந்­த­னைகள் உள்­ளன. அதா­வது அர­சாங்­கத்தின் வரு­மா­னத்தை விரை­வாக அதி­க­ரிக்க வேண்­டும், அர­சாங்­கத்தின் செல­வு­களை முடி­யு­மான வரையில் குறைக்க வேண்­டும், வரவு மற்றும் செலவின் இடை­வெ­ளியைக் குறைக்க வேண்­டும் நாண­யத்தின் பெறு­மா­னத்தை அதி­க­ரிக்க வேண்­டும், அர­சாங்­கத்தின் நஷ்­ட­மீட்டும் நிறு­வ­னங்­களை தனி­யார்­ம­யப்­ப­டுத்த வேண்டும் அல்­லது விற்­பனை செய்­யப்­பட வேண்டும் என்­ப­னவே     அந்­நி­பந்­த­னை­க­ளாகும்.

எனவே குறித்த நிபந்­த­னை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லேயே வரவு செல­வுத்­திட்டம் தயா­ரிக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்கு நிதி­ய­மைச்சர் தள்ளப்பட்டுள்ளார். ஆகவே சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மக்களு

Leave a comment