நீண்ட கால அடிப்படையில் இலங்கையின் வளங்கள் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் எதிர்கால தலைமுறையினர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தங்காலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
நவீன கால தேவைகளுக்கு அமைய நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட்டு எதிர்கால தலைமுறையினரிடம் கையளிக்கப்பட வேண்டும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்