மருத்துவ கல்வியினை பெறுவதற்கான ஆககுறைந்த பெறுபேறுகள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் மூன்று வார காலப்பகுதியினுள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சபையுடன் ஆலோசனை மேற்கொண்டதன் பின்னர் இது குறித்த அறிக்கை அரசாங்க வர்த்த மானியில் பிரசுரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சகல மருத்துவ பல்கலைகழகங்கள் வழங்கும் மருத்துவ கல்வி மற்றும் பயிற்சிகள் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் பெறுபேறுகளைக் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மருத்துவ பாடவிதானங்களை வழங்கும் சகல நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.