மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களின் குடும்பத்தாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நஸ்டஈட்டை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய காப்புறுதி நிதியம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 18,000 பேருக்காக 900 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், தற்போது வரை 9000ம் குடும்பங்களுக்கான காசோலை எழுதப்பட்டுள்ளதாகவும், தேசிய காப்புறுதி நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இவர்களுக்கு வழங்கத் தேவையான நிதி ஆறு மாதங்களுக்கு முன்னரே கொலன்னாவை பிரசேத செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த விடயங்கள் நேரடியாக கண்காணிக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நஸ்டஈடுகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக மேற்கொள்ளவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.