பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பாவனையால் சூழல் மாசடைவதுடன் பல்வேறுப்பட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
இந்தப் பாவனையின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையில் அக்கரப்பத்தனை நகரத்தில் நுவரெலியா பிரதேச சபை அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகள் நகர வர்த்தகர்கள் இணைந்து நேற்று (23) அன்று சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
இதன்போது பிரதேச சபை அதிகாரிகளால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொது மக்களால் மேற்கொண்ட சிரமதான பணியின் மூலம் நகரத்தில் இருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொலித்தின் ஆகியன அப்புறப்படுத்தப்பட்டன. நோய்கள் பரவக் கூடிய இடங்களை இனங்கண்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டதுடன் காடாக இருந்த பகுதிகளும் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிரமதானப் பணியில் 75 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.