யோகாவுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது: ஜி.கே.வாசன்

398 0

குழந்தைகள் நலன் கருதி யோகாவை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னை போயஸ் கார்டனில் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அவரது  உருவ படத்திற்கு  மரியாதை   செலுத்திவிட்டு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்  கூறியதாவது:-

பத்திரிகை துறையில் தனி முத்திரை பதித்த சிவந்தி ஆதித்தனாரை போற்றி வணங்குவோம். மத்திய அரசே பெட்ரோல் விலையை நிர்ணயிக்க வேண்டும். அது அவர்கள் கடமை. நாள்தோறும் விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற வேண்டும்.

யோகாவுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குழந்தைகள் நலன் கருதி கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.

போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் விழாக்காலங்களில் மக்கள் அவதிப்படுவார்கள்.

எனவே பேச்சு வார்த்தையில் நல்ல முடிவை எட்ட அரசு முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment