உலகின் முன்மாதிரியான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அனைத்து வகையிலும் உதவி – ஐ.நா பொதுச் செய்லாளர்

16992 0

சுபீட்சமும் சகவாழ்வும் நிறைந்த உலகின் முன்மாதிரியான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செய்லாளர் அண்டோனியா குட்டேரஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸூக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

பாரிஸ் மாநாட்டில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி, தனிப்பட்ட முறையில் மேற்கொண்டுவரும் முயற்சிகளை வரவேற்றுள்ள செயலாளர் நாயகம், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அபிவிருத்தி நடைமுறைகளுடன் இணைத்துக்கொள்வதற்கு ஜனாதிபதி காட்டிவரும் அக்கரை குறித்தும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலங்கையுடனான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்தி இலங்கைக்கும் மக்களுக்கும் முழுமையான உதவிகளை வழங்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி;, இதற்கு உலகின் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பும் நட்புறவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு விஜயம்செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a comment