தேங்காயின் விலையை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

300 0

தேங்காயின் விலையை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறுகைத்தொழில் வணிக அபிவிருத்தி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் தேங்காயின் விலை 85 ரூபாவில் இருந்து 100 ரூபாவாக உள்ளது.

இந்த நிலையில் தேங்காய் ஒன்றின் அதிகபட்ச விலை 75 ரூபாவாகவே இருக்க வேண்டும் என தெங்கு அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்கிளில் ஏற்பட்ட வரட்சியான காலநிலை காரணமாக தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment