சுதந்திரக் கட்சியின் உறுதியான நிலைப்பாடுகள் – அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பாரிய நெருக்கடி நிலை

387 0

ஜனாதிபதி பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடுகள் காரணமாக அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பாரிய நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு உருவாக்க சபையின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயம்பதி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தெரிவு முறை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தெரிவு முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படக் கூடாதெனவும், ஜனாதிபதி நேரடியாக தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகின்றது.

இதனை இடதுசாரி கட்சிகள் ஏற்றுக்கொள்ளாது.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும், நேரடியாக அவர் தெரிவு செய்யப்படும்பட்சத்தில், நெருக்கடியான காலங்களில் ஜனாதிபதி ஆட்சி முறை போன்ற ஒரு நிலை ஏற்படும் என ஜெயம்பதி விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல் முறை தொடர்பிலான சிக்கல்கள் இன்னும் தொடர்வதாக ஜெயம்பத்தி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment