ஈரப்பலா காய்பறிக்க முயற்சித்த ஒருவர் மின்சாரம் தாக்கி மரணித்தார்.
வென்னப்புவ வைக்கால பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தடியொன்றின் மூலம் ஈரப்பலா காய் பறிக்க முயற்சித்தபோது, அதியுயர் மின் அழுத்தம் கொண்ட மின்கம்பியில் தடி உராய்ந்ததினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் மரணடைந்துள்ளார்.