யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பு பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த சன்னா, தேவா,பிரகாஸ் ஆகியோரே சங்குவேலியிலும் குடும்பஸ்தரை வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்று மல்லாகம் நீதுவான் நீதிமன்ற நீதவான் யூட்சனுக்கும் மானி;பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சங்குவேலி வடக்க மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிலில் வந்த குழுவினர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலடியில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை தாக்குவதற்கு முற்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிலில் வருபவர்கள் தங்களை தாக்குவதற்கான வருகின்றதை அவதானித்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் உள்ள வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவ்வாறு ஓடிய சிவகுமாரான் பிரணவன் (வயது30) என்னும் குடும்பஸ்தரை அவருடைய வீட்டிற்கு அருகில் வைத்து மடக்கிப் பிடித்தது சரமாரியாக வாள்வெட்டு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது அவர் கழுத்து, தலை, கை போன்றவற்றில் சரமாரியாக காயங்களுக்க உள்ளாக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து சென்றதன் பின்னர் அயலவர்களின் உதவியுடன் காயப்பட்டவர் அங்கிருந்து மீட்கப்பட்ட சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
இவ்வாறு சிக்சிசை பெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் அதிகாலை 1.45 மணியளவில் கிசிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார்.
மேற்படி வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக உயிரிளந்தவரின் உறவிர்களிடம் கேட்ட போது, உயிரிளந்தவரின் உறவினர் ஒருவருக்கும் சன்னா, தேவா, பிரகாஸ் என்பவர்களுக்கும் முன்னரே பகை இருந்தது. இதன் காரணமாக அவர்களால் இவருடைய சகோதரன் ஏற்கனவே வாள்வெட்டுக்கு இலக்காகியிருந்தார்.
வாள்வெட்டிற்கு இலக்கானவர் வைத்திய சாலையில் இருந்து மீண்டும் வீட்டிற்கு வந்த பின்னர் தற்போது உயிரிளந்த பிரனவன் அவரை தன்னுடைய வீட்டிற்க அழைத்து வந்து தனது பாதுகாப்பில் வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று வேறு பலருடன் மோட்டார் சைக்கில்களில் வாள், பொல்லு, கத்திகளுடன் வந்த சன்னா, தேவா, பிரகாஸ் ஆகியோர் பிரனவன் மீது வாள்வெட்டு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
குறித்த 3 பேருமே பிரனவன் மீது வாள்வெட்டு நடத்தினார்கள். இவர்களுடைய பெயர் விபரங்களை வைத்திய சாலை பொலிஸார் மற்றும் மானிப்பாய் பொலிஸாரிடம் வழங்கியுள்ளோம்.
உயிரிளந்தவரின் மரண விசாரணைகளை மேற்கொண்ட நீதவானிடமும் மேற்குறித்த பெயர் உடையளவர்களே வாள்வெட்டு நடத்தினார்கள் என்று தெரிவித்துள்ளோம் என்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள்
September 26, 2024 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த மதிப்பளித்து நிகழ்வு
November 22, 2024 -
பிரான்சின் ஏனைய வெளி மாநிலங்களிலும் இடம்பெறவுள்ள மாவீரர் நாள்- 2024
November 18, 2024 -
மேதகு தேசியத் தலைவரின் அகவை விழா – யேர்மனி
November 2, 2024 -
பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2024
October 20, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 நெதர்லாந்து.
October 17, 2024 -
மாவீரர் நாள் – 2024 -பிரான்சு.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 – சுவிஸ்.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பெல்சியம்
October 7, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பிரித்தானியா
October 5, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 யேர்மனி, Dortmund.
September 29, 2024