ஜனாதிபதியுடன் விஜயத்திலுள்ள ரஞ்ஜனுக்கு எதிராக நீதியரசரிடம் மனு

343 0

நீதிமன்ற கட்டமைப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக குற்றம்சாட்டி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கை விடுக்கும் ஆவணங்களை அச்சங்கம்  பிரதம நீதியரசரிடன் முன்வைத்துள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி சில்வா இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.

ரஞ்ஜன் ராமநாயக்க தற்பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்க விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment