வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஸ்கமுவ தேசிய வனத்தில் பணியாற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடைய துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை வலயத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் வில்கமுவ காவல் துறை மற்றும் மாத்தளை வலய குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல் துறை தலைமையகம் கூறியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை இரவு வஸ்கமுவ தேசிய வனத்தில் பணியாற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடைய ரி56 ரக துப்பாக்கி ஒன்று உட்பட வேறு 4 ஆயுதங்களும் திருடப்பட்டிருந்தன.
ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு இந்த ஆயுதங்கள் திருடப்பட்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.