ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 75 ரூபா; மீறினால் தண்டனை

377 0

தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக இருக்க வேண்டும் என்று தென்னை செய்கை சபை கூறியுள்ளது. 

தேங்காய் ஒன்றை நுகர்வோர் கொள்வனவு செய்யும் வரையிலான அனைத்து செயற்பாடுகளுக்கும் செலவாகின்ற முழுத் தொகையை கணக்கிடும் போது, ஒரு தேங்காயை அதிகபட்சமாக 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்று அந்த சபையின் தலைவர் கபில யகந்தாவல கூறினார்.

குறித்த விலையை மீறி அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment