பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது முறையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம்

388 0

நீதிமன்ற கட்டமைப்புக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை முன்வைத்த குற்றச்சாட்டில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது முறையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கை விடுக்கும் ஆவணங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசரிடன் முன்வைத்துள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி சில்வா இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.

இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு மோசடியாகவும், முறையற்ற வகையிலும், ஒழுங்கின்றி செயற்படுவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த வாரம் கருத்து வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment