ஸ்காபரோ-கில்வூட் தொகுதியில், 2018ல் வரவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள திரு.குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களது வேட்பாளர் நியமனத் தேர்தல் மிக விரைவில் நடக்கவிருக்கிறது. சிறந்த சமூகசேவையாளரும் அரசியல் ஆய்வாளரும் எமது சமூகத்தில் நன்கு அறியப்பட்டவருமான குயின்ரஸ் துரைசிங்கம், வடஅமெரிக்காவில் பெயர்பெற்ற முன்னணி நிறுவனமான தொம்சன்-றொய்ட்டேர்ஸ் ரொறன்ரோ கிளையில் கணினித் தொழில்நுட்பத் துறையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக உயர் பணியிலுள்ளார்.
தமிழ் ஆங்கில இருமொழிப் புலமைகொண்ட குயின்ரஸ் துரைசிங்கம் போட்டியிடும் ஸ்காபரோ-கில்வூட் தொகுதியில் மேலும் இரு இந்திய நாட்டவர்களும் போட்டியிடும் நிலையில், இவர் சந்தித்துள்ள கடும் போட்டியை வெற்றியாக்குவது ரொறன்ரோ தமிழ் மக்களின் முக்கிய சவாலாகவே காணப்படுகிறது.
“I think there is something more important than believing: Action! The world is full of dreamers, there aren’t enough who will move ahead and begin to take concrete steps to actualize their vision.”
– W. Clement Stone
“வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை!”