தடை செய்யப்பட்ட கூரிய வாளுடன் இளைஞன் கைது

2161 0

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி பகுதியில் தடை செய்யப்பட்ட கூரிய வாளொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர், இன்று (23) காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளாரென, காவல் துறையினர் தெரிவித்தனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இளைஞனை விசாரணை செய்த போது அவரிடம் மறைத்து வைக்கப்ட்டிருந்த நிலையில் கூறிய வாளொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லாஹ் முகம்மது றினாஸ் (25 வயது) எனவும் காவல் துறை தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன், கைப்பற்றப்பட்ட வாளுடன், கிண்ணியாகாவல் துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பதுடன் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிண்ணியாகாவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கிண்ணியா சூரங்கல், சாந்தி நகர் பகுதியில் வைத்து 20 கிராம் கேரளக் கஞ்சாவுடன், 47 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் கிண்ணியா காவல் துறையினர் தெரிவித்தனர்.

Leave a comment