ஒரு குடையின் கீழ் மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் முயற்சியில் தாம் வெற்றியடைந்திருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
உலக நாடுகளின் தலைமைத்துவத்துடன், எமக்கு நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பேசி இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல்கள் கொடுக்கவேண்டிய கடப்பாடும் எங்களுக்கு உண்டு.
இவ்வாறு செயற்படுவதன் மூலம்தான் எமக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியுமே தவிர வெறுமனே பிரேரணைகளை விடுவதில் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்று கூறினார்.