போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்திய இராணுவம்!

293 0

வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து வன ஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்க காணிகள் அடையாளப்படுத்துவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாலையில் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்களை சீருடை அணிந்த இராணுவத்தினர் மிரட்டியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சீருடையுடன் வந்த இராணுவத்தினர் மக்களை மறித்து எதற்காக இந்த போராட்டம் என்று மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பியதாக மக்கள் கூறினர்.

மேலும் இந்த போராட்த்தை முன்னெடுப்பதில் அச்சமான சூழ்நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் ஜே 145 மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment