சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையில் சார்க் மருத்துவக் கல்லூரியொன்று அமைக்கப்பட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டத்தின்போது, அந்தக் கல்லூரியை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான ஆலோசனையை அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கியுள்ளார்.
இக்கல்லூரியை நிர்மாணிப்பதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் எனவும், கட்டட வரைபடம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துக்குள் பூர்த்தியாகும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அனைத்து அரச நிறுவனங்களையும் ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது. பொது மக்கள் இதனால் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அரச மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பல மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளன.
நிலையில் மற்றுமொரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கான ஏற்பாட்டு வேலைகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டில் இன்னும் சில அரச நிறுவனங்களே சைட்டம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.